ஆந்திராவிலிருந்து கடத்தி வந்த 20 கிலோ குட்கா பறிமுதல்: 2 பேர் கைது

திருத்தணி: தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள், ஆந்திர மாநிலம் நகரி பகுதியில் இருந்து கடத்தி வரப்படுவதாக மாவட்ட எஸ்.பி சிபாஸ் கல்யாணுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவரின் உத்தரவின் பேரில், திருத்தணி போலீசார் பைபாஸ் ரவுண்டானாவில் நேற்றுமுன்திம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பதிவு எண் இல்லாத இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரை போலீசார் சந்தேகத்தின் பேரில் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர்.

அவர்கள் மீது சந்தேகம் அதிகரிக்கவே, போலீசார் அவர்களை சோதனை செய்தனர். இதில் வாகனத்தில் 20 கிலோ குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்த போலீசார், மேலும் நடத்திய விசாரணையில், குட்காவை கடத்தி வந்தவர்கள் ஆந்திர மாநிலம் நகரி அடுத்த டி.ஆர்.கண்டிகை பகுதியைச் சேர்ந்த மோகன் (52), சாய்சரண் (27) ஆகியோர் என்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து திருத்தணி போலீசார் இருவரையும் கைது செய்து, இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

Related posts

ஜூலை-02: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்