200 கிலோ மணிமருந்து பறிமுதல்; சட்டவிரோத பட்டாசு ஆலைக்கு சீல்: உரிமையாளர் உள்பட 3 பேர் கைது

சிவகாசி: சிவகாசி அருகே, குடியிருப்பு பகுதியில் இங்கிய சட்டவிரோத பட்டாசு ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். அங்கிருந்து 200 கிலோ மணி மருந்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஆலை உரிமையாளர் உள்பட 3 பேரை கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல்லில் குடியிருப்பு பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கப்படுவதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன்பேரில், சிவகாசி போலீசார் திருத்தங்கல் பெரியார் நகரில் நேற்று மாலை கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த செல்வகணேஷ் என்பவரின் இடத்தில், தகரசெட் அமைத்து சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தது தெரிய வந்தது. மேலும், தகரசெட்டில் பட்டாசு மூலப்பொருட்கள், தூக்கு மணிமருந்து, முழுமை பெறாத பட்டாசுகள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பேன்சி ரக வெடிகள் தயாரிக்கப்பட்டு உலர வைத்திருந்ததும் தெரிய வந்தது.

இதை தொடர்ந்து தகரசெட்டில் 6 மூட்டைகளில் வைத்திருந்த பேன்சி ரக வெடி தூக்கு மணி மருந்து 200 கிலோ மற்றும் பட்டாசு மூலப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், தகர செட்டில் இயங்கிய பட்டாசு ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இது தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர் பால்பாண்டி (48) உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

ஒகேனக்கல்: நீர்வரத்து 14,000 கன அடியாக அதிகரிப்பு..!!

கல்லீரல் அறுவை சிகிச்சை கட்டமைப்பு: ஐகோர்ட் கிளை கேள்வி

சென்னையில் ரூ.600 கோடியில் குடியிருப்பு: பிரிகேட் நிறுவனம் திட்டம்