தேர்தல் நன்னடத்தை விதிகள் அமல் பறக்கும் படையினரால் ரூ.168 கோடி பறிமுதல்

சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் கண்காணிப்பு பணியில் 700க்கும் மேற்பட்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. ஆவணமின்றி ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் எடுத்துச் சென்றால் பணத்தை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் பறக்கும் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் பறக்கும் படையினர் காவலர்களுடன் இணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி ரூ.74 கோடி ரொக்க பணமும், மதுபான வகைகள் ரூ.3.9 கோடி, போதைப்பொருள் வகைகள் ரூ.78 லட்சம், தங்கம், வெள்ளி பொருட்கள் ரூ.74 கோடி மற்றும் பரிசு பொருட்கள் ரூ.15 கோடி என கடந்த 16ம் தேதி முதல் நேற்று வரை ரூ.168 கோடி வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Related posts

துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலினுக்கு மஜக தலைவர் தமிமுன் அன்சாரி வாழ்த்து

தமிழகத்தில் அபாயகரமான விபத்துகள் கடந்த ஆண்டை விட தற்போது 5% குறைந்துள்ளது: டிஜிபி அலுவலகம் அறிக்கை

துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரைபிரபலங்கள் வாழ்த்து!