செக்யூரிட்டி பேப்பர் மில்லில் சூபர்வைசர்

பாதுகாப்பு முத்திரைத்தாள் அச்சடிக்கும் மில்லில் சூபர்வைசர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் விவரம்:

1Welfare Officer: 1 இடம் (பொது). சம்பளம்: ரூ.29,740- 1,03,000. வயது: 18 லிருந்து 30க்குள். தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் சமூக அறிவியலில் டிப்ளமோ தேர்ச்சி அல்லது சமூக அறிவியலில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி. மேலும் இந்தியில் சிறப்பான அறிவுத் திறன் பெற்றிருக்க வேண்டும்.
2Supervisor- Electrical: 1 இடம் (பொது). தகுதி: எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோவில் முதல் வகுப்பில் தேர்ச்சி.
3Supervisor-Production/Lab: 4 இடங்கள் (பொது-1, எஸ்டி-1, ஒபிசி-2). தகுதி: Pulp & Paper Technology/Chemical Technology/ Chemical Engineering டிப்ளமோவில் முதல் வகுப்பில் தேர்ச்சி.
4Supervisor (Store): 1 இடம் (எஸ்சி): தகுதி: மெக்கானிக்கல்/எலக்ட்ரிக்கல்/கெமிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் முதல் வகுப்பில் டிப்ளமோ தேர்ச்சி.
5Junior/ Hindi Translator: 1 இடம் (பொது). தகுதி: ஆங்கிலம்/ இந்தி பாடப் பிரிவில் முதுகலைப் பட்டம் தேர்ச்சி. மேலும் இந்தியிலிருந்து ஆங்கிலம், ஆங்கிலத்திலிருந்து இந்திக்கு மொழி மாற்றம் செய்வதில் ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு வயது: 18 லிருந்து 30க்குள். சம்பளம்: ரூ.27,600-95,910.
6Secretarial Assistant: 1 இடம் (பொது). சம்பளம்: ரூ.23,910-85,570. வயது: 18 லிருந்து 28க்குள். தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் 55% மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும். மேலும் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் ஆங்கிலம், 40 வார்த்தைகள் இந்தி சுருக்கெழுத்தில் அதனை மொழி மாற்றம் செய்து டைப்பிங் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

கட்டணம்: பொது/பொருளாதார பிற்பட்டோர்/ ஒபிசியினருக்கு ₹600/-.எஸ்சி/எஸ்டி/ மாற்றுத்திறனாளிகளுக்கு ₹200/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
http://spmnarmadapuram.spmcil.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.10.2023.

Related posts

உளுந்தூர்பேட்டையில் புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து வழக்கறிஞர்கள் போராட்டம்!!

சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

எவ்வளவு வேண்டுமோ நீக்குங்கள்.. உண்மையை உங்களால் மாற்ற முடியாது: ராகுல் காந்தி பதிலடி