தீவிரவாத ஊடுருவலை தடுக்கும் வகையில் பழவேற்காட்டில் பாதுகாப்பு ஒத்திகை

பொன்னேரி: பழவேற்காட்டில் தீவிரவாத ஊடுருவலை தடுக்கும் வகையில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. இந்திய கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்துவதை தடுக்கும் பொருட்டு கடலோர கிராமங்களில் அரசு சார்பில் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இந்த, பாதுகாப்பு நடவடிக்கைகள் சரியாக நடக்கிறதா? என்பதை பரிசோதிக்கும் வகையில், இந்திய கடலோர காவல் படையினர், தமிழக மரைன் போலீசார் மற்றும் மாநில போலீசார் இணைந்து சாகர் கவாச் (கடல்கவசம்) பாதுகாப்பு ஒத்திகை பயிற்சியை ஆண்டுதோறும் நடத்துவது வழக்கம்.

அதன்படி, இந்தாண்டு ‘சாகர் கவாச் ஆபரேஷன்’ என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை தமிழகத்தின் கடலோர பகுதியில் நேற்று தொடங்கியது.திருவள்ளூர் மாவட்ட கடலோர பகுதியான பழவேற்காடு பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில், சந்தேகிக்கும் பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் அடிப்படையில், தமிழக எல்லையான ஆரம்பாக்கம் பகுதியில் உள்ள பழவேற்காடு ஏரிக் கரையோர கிராமங்களில் தொடங்கி காட்டுப்பள்ளி, எண்ணூர் முகத்துவாரம் வரை இந்த ஒத்திகை நடந்தது. இதில், மாவட்ட காவல்துறை எல்லைக்குட்பட்ட போலீசாரும், ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட போலீசாரும், தமிழக கடலோர காவல் படையைச் சேர்ந்த வீரர்களும் ஈடுபட்டனர்.

Related posts

ரயில்வேக்கான தனி பட்ஜெட்டை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும், லோகோ பைலட் காலி பணியிடங்களை நிரப்பாதது தான் விபத்துகளுக்கு முக்கிய காரணம்: ஒன்றிய பாஜ அரசு மீது செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

நீட் தேர்வு வினாத்தாள் கசித்ததை உச்சநீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டது ஒன்றிய அரசு: உச்சநீதிமன்றம் ஒன்றிய அரசுக்கு சரமாரி கேள்வி

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்