மத மோதலை தூண்டும் பேச்சு: எச்.ராஜா மீது 4 பிரிவில் வழக்கு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் கடந்த 19ம் தேதி விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடந்தது. இதையொட்டி வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக செல்லும் நிகழ்ச்சியில் பாஜவை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் பேசிய பாஜ முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, பிற மதங்கள் குறித்தும், முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி குறித்தும் அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது.

மத மோதலை தூண்டும் வகையிலும், முதல்வர், அமைச்சர் குறித்தும் அவதூறாக பேசிய எச்.ராஜா மீது, காளையார்கோவில் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கியசாமி மற்றும் நிர்வாகிகள் காளையார்கோவில் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து மத மோதலை தூண்டும் வகையில் பேசிய எச்.ராஜா மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Related posts

சென்னையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு 102 டிகிரி வெயில்

தோகா விமானங்கள் தாமதம் சென்னை விமான நிலையத்தில் 320 பயணிகள் கடும் அவதி

தடை செய்யப்பட்ட பகுதியில் விநாயகர் சிலையை எடுத்து செல்ல முயன்ற 61 பேர் கைது