திண்டுக்கல் தொகுதியை கூட்டணிக்கு ஒதுக்குனதுல ரகசியம் இருக்காம்…அதிமுக உளறல் மன்னன் சஸ்பென்ஸ்

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பாக எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் முகமது முபாரக் போட்டியிடுகிறார். இதற்கான வேட்பாளர் அறிமுக கூட்டம் நேற்று திண்டுக்கல்லில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது: அதிமுக கோட்டையாக இருக்கக்கூடிய திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியை கூட்டணி கட்சியான எஸ்டிபிஐக்கு ஒதுக்கியுள்ளது குறித்து பல ரகசியங்கள் உள்ளது.

இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற முதல் தொகுதி திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி ஆகும். பானை சின்னம், டிவி சின்னத்தில் நிற்கின்றோம் என எஸ்டிபிஐ கட்சியினர் கூறியிருந்தால் வணக்கம் போட்டு வாங்கன்னு சொல்லிட்டு, கண்ணன் அல்லது எனது மகனை போட்டியிட வைத்திருப்போம். ஆனால் இரட்டை இலை சின்னத்தில் நிற்கிறேன் என முகமது முபாரக் கூறியதால் நாங்கள் போட்டியிட வாய்ப்பு அளித்தோம். எஸ்டிபிஐ கட்சியை திண்டுக்கல்லில் நிற்க வைத்ததின் ரகசியம் இதுதான்.

‘ஆமாப்பா… விடிய விடிய தூக்கம் இல்லாம போதையில் உளறுறேன்’
திண்டுக்கல் சீனிவாசன் பேசி முடித்தவுடன், ‘‘மார்ச் 26ம் தேதி காலை நத்தம் சட்டமன்ற தொகுதியில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெறும்’’ என்றார். அப்போது பழநியை சேர்ந்த அதிமுக நிர்வாகி ஒருவர், ‘‘பழநியில் மார்ச் 26ம் தேதி வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெறும் என்றீர்கள், தற்போது மாற்றி கூறுகிறீர்கள்’’ என்றார். அதற்கு திண்டுக்கல் சீனிவாசன், ‘‘ஆமாம்பா… போதையில் உளறுகிறேன். விடிய விடிய தூக்கம் இல்லாமல் போதையில் உளறுகிறேன்’’ என்றார். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் சிரிப்பு ஒலி எழுந்தது.

Related posts

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?

திருவள்ளுவர் பிறந்தநாள் குறித்து எந்த ஆதாரமும் இல்லாமல் அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்!!