மண்டபம் அருகே 200 கிலோ கடல் ஆமை கரை ஒதுங்கியது

மண்டபம் : மண்டபம் அருகே வேதாளை கடலோர பகுதியில், இறந்த நிலையில் 200 கிலோ கடல் ஆமை கரை ஒதுங்கியது. மன்னார் வளைகுடா ஆழ்கடல் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன் இனங்கள் வசித்து வருகின்றன. ஆழ்கடல் பகுதியில் விசைப்படகுகள், பெரிய கப்பல்கள் செல்லும்போது, மோதும் மீன்களில் சில காயமடைந்து, கடலில் உயிரிழந்து கரை ஒதுங்குவது வழக்கம்.

அதுபோல் மண்டபம் அருகே வேதாளை சிங்கிவலைகுச்சு கடலோரப்பகுதியில் ஆமை ஒன்று கரை ஒதுங்கியது. தகவலறிந்து மண்டபம் வனச்சரகர் மகேந்திரன் தலைமையில் அலுவலர்கள் சென்று பார்வையிட்டனர். அப்போது 200 கிலோ எடையுள்ள 30 வயது ஆண் கடல் ஆமை இறந்த நிலையில், உடலில் காயங்கள் ஏற்பட்டு இருந்தது தெரிய வந்தது. மேலும். ஆமை அழுகிய நிலையில் இருந்ததால், எப்போது அடிபட்டது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் அப்பகுதியில் மணலில் குழி தோண்டி புதைத்தனர்.

Related posts

சென்னை கீழ்கட்டளையில் உள்ள ஹோலி பேமிலி கான்வென்ட் மெட்ரிகுலேஷன் பள்ளியில் அதிரடியாக உயர்ந்த பருவக்கட்டணம்: பெற்றோர்கள் போராட்டம்

வழிப்பறி திருடர்களை கண்காணிக்க நாமக்கல் பஸ் நிலைய புறக்காவல் நிலையத்தில் கூடுதல் போலீசார்

விவசாயம் செய்வதாக நுழைந்து மனைகளாக மாற்றும் அவலம் தொடர் கதையாகும் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு