அசாமில் தொகுதி பங்கீடு 11 இடங்களில் பாஜ போட்டி: 3 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு

கவுகாத்தி; அசாமில் வரும் மக்களவைத் தேர்தலில் பாஜ 11 இடங்களில் போட்டியிடும் என்றும், அதன் கூட்டணிக் கட்சிகளான அசாம் கணபரிசத் (ஏஜிபி) மற்றும் ஐக்கிய மக்கள் கட்சி லிபரல் (யுபிபிஎல்) 3 தொகுதிகளில் போட்டியிடும் என்றும் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
அசாம் மாநிலத்தில் 14 மக்களவை தொகுதிகள் உள்ளன.

இதில் பா.ஜ கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இதுபற்றி அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, மாநில பாஜ தலைவர் பாபேஷ் கலிதா ஆகியோர் தேசிய தலைவர் ஜேபி நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய பொதுச்செயலாளர் பிஎல் சந்தோஷ் ஆகியோருடன் கூட்டணி குறித்து பேசினார்கள்.

அதன் அடிப்படையில் அசாம் கணபரிசத் கட்சிக்கு பார்பெட்டா மற்றும் துப்ரி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் கட்சி லிபரலுக்கு கோக்ரஜார் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 11 தொகுதிகளில் பா.ஜ போட்டியிட உள்ளது. 2019 மக்களவை தேர்தலில் பா.ஜவுக்கு 9 எம்பிக்களும், காங்கிரஸ் கட்சிக்கு 3 எம்பிக்களும், ஏஐயுடிஎப் கட்சிக்கு ஒன்று, ஒரு சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற்றனர்.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்