பண்ருட்டி அருகே 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கல்: பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்; சிபிசிஐடி அதிரடி

கடலூர்: பண்ருட்டி அருகே வீரபெருமாநல்லூரில் மெத்தனால் பதுக்கிவைக்கப்பட்டிருந்த பெட்ரோல் நிலையத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் கடந்த மாதம் விஷச்சாராயம் குடித்து 65 பேர் உயிரிழந்தனர். இன்னும் சிலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். முக்கிய குற்றவாளிகளான புதுச்சேரி மடுகரை மாதேஷ், கள்ளக்குறிச்சி பிரபல சாராய வியாபாரி கண்ணுக்குட்டி (எ) கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா உள்பட 21 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் மாதேஷ், கோவிந்தராஜ், விஜயா உள்பட 11 பேரை சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதன்படி மாதேஷிடம் சிபிசிஐடி போலீஸ் விசாரணை நடத்தியது. வீரப்பெருமாநல்லூர் பகுதியில் உள்ள இயங்காத பெட்ரோல் பங்கில் 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். பெட்ரோல் பங்க்-ல் மெத்தனால், ரசாயனம் பதுக்கி வைத்துள்ளதாக மாதேஷ் அளித்த வாக்குமூலத்தை அடுத்து சோதனை நடத்தினர். பெட்ரோல் பங்க்-ல் கீழே உள்ள டேங்குகளை ஆய்வுசெய்த போது மெத்தனால் பதுக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மெத்தனால் பதுக்கியதை அடுத்து பயன்பாட்டில் இல்லாத பெட்ரோல் பங்க்-குக்கு சிபிசிஐடி அதிகாரிகள் தற்காலிகமாக சீல் வைத்தனர்

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி