அதிக மதிப்பெண் எடுத்திருந்தாலும் தேர்ச்சி பெறாத ‘மாணவர்’ காங்கிரஸ்: அமித் ஷா விமர்சனம்

மும்பை: அதிக மதிப்பெண்கள் எடுத்தாலும் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவனைப் போன்றது காங்கிரஸ் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். மகாராஷ்டிராவில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மும்பையில் பாஜக தொண்டர்கள் மத்தியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, லோக்சபா தேர்தல் முடிவுகள் தொடர்பாக பேசுகையில், ‘இரண்டு மாணவர்கள் இருக்கிறார்கள்.

ஒருவர் படிப்பில் சிறந்து, ஒவ்வொரு தேர்விலும் 90% மதிப்பெண்கள் பெறுவார். மற்றவர் 20 முதல் 25 சதவீத மதிப்பெண்கள் பெறுவார். ஆனால், ஒரு தேர்வில் 90 முதல் 95 சதவீத மதிப்பெண்கள் பெற்ற மாணவருக்கு 80 சதவீதமும், 20 மதிப்பெண்கள் பெற்ற மாணவர் 30 சதவீதமும் கிடைத்தது. ஆனால், 30 சதவீத மதிப்பெண்கள் எடுத்த மாணவர், இன்னும் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. அந்த 30 சதவீதம் பெற்ற மாணவர் தான் காங்கிரஸ் கட்சி. எனவே பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்’ என்றார்.

Related posts

கூட்டுறவு செயலி!

கடன் வாங்கும் முன் கவனியுங்கள்!

ஆசியாவின் 3ஆவது சக்திவாய்ந்த நாடு இந்தியா: லோவி மதிப்பீட்டு நிறுவனம் அறிவிப்பு!!