மூன்றரை ஆண்டுகளுக்கு பிறகு ஸ்கூட் ஏர்லைன்சின் சென்னை-சிங்கப்பூர் விமான சேவை துவக்கம்: விமான பயணிகள் மகிழ்ச்சி

சென்னை: கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த, சென்னை – சிங்கப்பூர் – சென்னை ஸ்கூட் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், மூன்றரை ஆண்டுகளுக்குப் பின்பு மீண்டும் சேவையை தொடங்கியது. சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளதால், இதுவரை நாள் ஒன்றுக்கு 6 விமானங்கள் சென்னை – சிங்கப்பூர் – சென்னை இடையே 12 விமான சேவைகள் இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்து, கூடுதலாக சிங்கப்பூர் – சென்னை – சிங்கப்பூர் இடையே விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. ஸ்கூட் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சிங்கப்பூரில் இருந்து 158 பயணிகளுடன் புறப்பட்டு நள்ளிரவு 11:50 மணிக்கு, சென்னை வந்தது.

அதே விமானம் சென்னையில் இருந்து நேற்று அதிகாலை 1:42 மணிக்கு புறப்பட்டு சென்றது. இது தினசரி விமானமாக இயக்கப்படுகிறது. இதனால் சென்னை – சிங்கப்பூர் விமானங்களின் எண்ணிக்கை 12லிருந்து 14 ஆக அதிகரித்துள்ளது. ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானம், ஏற்கனவே சிங்கப்பூர் – சென்னை – சிங்கப்பூர் இடையே இயக்கப்பட்டு வந்தது. கடந்த 2020ல் கொரோனா ஊரடங்கு காரணமாக, இந்த விமான சேவை நிறுத்தப்பட்டது. கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்ததும், தமிழ்நாட்டில் திருச்சி, கோவை ஆகிய நகரங்களுக்கு இந்த விமான நிறுவனம், விமான சேவையை தொடங்கியது. சென்னைக்கு மட்டும் விமான சேவை தொடங்காமல் இருந்தது. தற்போது, சுமார் மூன்றரை ஆண்டு இடைவெளிக்கு பின்பு, மீண்டும் ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், சிங்கப்பூர் – சென்னை இடையே விமான சேவையை தொடங்கியுள்ளது.

Related posts

அக்டோபர் 2ம் தேதி திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை ஒட்டி காலை 10 மணி முதல் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்!

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு அரசு கண்டனம்

கொடைக்கானலில் தொடரும் இ-பாஸ் நடைமுறை!