உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள் காந்திகிராம பல்கலையின் 3 பேராசிரியர்கள் தேர்வு

நிலக்கோட்டை: அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் ஜான் லொன்னிடிஸ் மற்றும் அவரது குழுவினர் 22 அறிவியல் துறைகள் மற்றும் 176 துணை துறைகள் மூலம் 2023க்கான உலகின் தலைசிறந்த முதல் 2% விஞ்ஞானிகளை தேர்வு செய்து பட்டியலை வெளியிட்டுள்ளனர். இதில் உலகம் முழுவதும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் இந்தியாவிலிருந்து 3,500க்கும் அதிகமான விஞ்ஞானிகள் இடம் பிடித்தனர்.

அனைத்து விஞ்ஞானிகளும் வெளியிட்ட குறைந்தபட்சம் 5 ஆய்வு கட்டுரைகள், புலம் மற்றும் துணை புலம் சார்ந்த சதவீதங்களின் தரவரிசை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த பட்டியலில் திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராம கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர்கள் கணிதவியல் துறை பி.பாலசுப்பிரமணியம், வேதியியல் துறை எஸ்.மீனாட்சி, இயற்பியல் துறை கே.மாரிமுத்து ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இவர்கள் உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் தற்போது 5வது முறையாக தேர்வு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்திய அணி!

சென்னையில் ஓடப்போகும் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்; வெற்றிகரமாக உற்பத்தி நிறைவு!

ஒட்டன்சத்திரம்- கரூர் சாலையில் ஊர் பெயர் பலகையை மறைத்த மரக்கிளைகள் உடனே அகற்றம்: பொது மக்கள் நன்றி தெரிவிப்பு