மோடி பேரணியில் பள்ளி மாணவர்கள்: கோவை தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை

கோவை: கோவையில் பிரதமர் மோடி பேரணியில் மாணவர்களை பங்கேற்க வைத்த தனியார் பள்ளி தலைமை ஆசிரியர், பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மோடி பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற காட்சிகள் வெளியானதை அடுத்து கோவை தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை. கோவையில் உள்ள அரசு உதவிப்பெறும் பள்ளியான ஸ்ரீ சாய்பாபா வித்யாலயம் மாணவர்கள் நேற்று மோடி பேரணியில் பங்கேற்க வைக்கப்பட்டனர். பள்ளி மாணவர்களை தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்துள்ளது.

 

Related posts

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்

கோவை ரயில் நிலையத்துக்கு வடமாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தல்: 13 வாலிபர்கள் சிக்கினர்

திருச்சியில் செல்போன் பறித்து தப்பித்த திருடர்களை விரட்டி சென்ற போலீஸ்காரருக்கு வெட்டு: 3 பேர் சிக்கினர்