பள்ளிக்கல்வி செயலருடன் பேச்சுவார்த்தை போராட்டத்தை தொடர ஆசிரியர்கள் முடிவு

சென்னை: தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சார்பில் 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2 நாட்களாக சென்னையில் உள்ள டிபிஐ வளாகத்தில் தொடக்க கல்வி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபடும் அமைப்பினருடன் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மதுமதி நேற்று மதியம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

இந்தபேச்சு வார்த்தையில் 243 அரசாணையின் பாதிப்பு குறித்தும் தெரிவிக்கப்பட்டதில், ஆசிரியர்கள் தரப்பில் உள்ள நியாயமான கோரிக்கைளில் சிலவற்றை விரைவில் நிறைவேற்றித் தர ஏற்பாடு செய்வதாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தெரிவித்தார். இருப்பினும், ஏற்கெனவே அறிவித்தபடி போராட்டம் தொடரும் என்று டிட்டோஜாக் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இதன்படி, தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொருளாளர் தியாகராஜன் உள்பட 12 சங்கங்களின் பொருளாளர்கள் இன்றைய போராட்டத்தை தலைமையேற்று நடத்துகின்றனர்.

Related posts

ஜப்பானில் முதியோர்கள் எண்ணிக்கை புதிய உச்சம்

லெபனானில் பேஜர்களை தொடர்ந்து வாக்கி டாக்கிகள் வெடித்ததில் 20 பேர் உயிரிழப்பு

உத்திரப்பிரதேசத்தில் உயர்அழுத்த மின் கம்பி அறுந்து 20 பேர் காயம்