பள்ளிக் கல்வித்துறையில் துறை மாறுதல் கோரி விண்ணப்பிக்க ஜூலை 26ம் தேதி வரை அவகாசம் நீடிப்பு

சென்னை: பள்ளிக் கல்வித்துறையில் துறை மாறுதல் கோரி விண்ணப்பிக்க ஜூலை 26ம் தேதி வரை அவகாசம் நீடிக்கபப்ட்டுள்ளது. பல்வேறு ஆசிரியர்களிடம் இருந்து கால நீட்டிப்பு கேட்டு கோரிக்கை வந்த நிலையில் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பிறதுறையில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் அலகுவிட்டு அலகு, துறை மாறுதல் மூலம் பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு, நகராட்சி உயர், மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிய உரிய துறையின் மூலமாக தடையின்மைச் சான்று பெற்று மாறுதல் மூலம் விண்ணப்பிக்க வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் காலஅட்டவணை வெளியிடப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக அலகு, துறை மாறுதல் கோரி விண்ணப்பிக்கும் தேதியினை கல்வி தகவல் மேலாண்மையில் (EMIS online) பதிவேற்றம் செய்ய 14.07.2023 வரை நீட்டித்து ஆணை வழங்கப்பட்டது.
தற்போது பல்வேறு ஆசிரியர்களிடமிருந்து வரப்பெற்ற கோரிக்கைகளின் அடிப்படையில் மேலும் அலகு, துறை மாறுதல் கோரி விண்ணப்பிக்க வருகின்ற 26.07.2023 வரை காலநிர்ணயத்தை நீட்டித்து ஆணை வழங்கப்படுகிறது. கலந்தாய்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவித்துள்ளது

Related posts

எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு – இன்று உத்தரவு

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

தாயகம் வந்தது இந்திய கிரிக்கெட் அணி