சிலம்ப போட்டியில் பதக்கம் குவித்த ஓவேலி பகுதி பள்ளி மாணவர்கள்

கள்ளக்குறிச்சி சங்கராபுரத்தில் கல்லைக் கலைக்கூடம் சார்பில் கராத்தே மணி ஏற்பாட்டில் 2023ம் ஆண்டுக்கான சிலம்பம், யோகா போட்டி நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதிலும் இருந்தது 40 அணிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். இதில் நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த ஓவேலிபகுதியை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியர் 11 பேர் கலந்துகொண்டு 17 போட்டிகளில் முதலிடம் பெற்று பதக்கங்கள் சான்றிதழ்களை அள்ளி வந்துள்ளனர்.

ஒவேலி செல்வபுரம் பகுதியில் சிலம்ப பயிற்சி அளிக்கும் பயிற்சியாளர் வேலாயுதம் தலைமையில் கலந்து கொண்ட கூடலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் பவித்ரா, தர்ஷினி, காயத்ரி, ஓவேலி மரப்பாலம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் பரத் மற்றும் கிஷோர், பாரதி நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் அனுஷா, அனு, மதுமிதா, ஹரிபிரசாத், ஜெகதீஸ்வரன், ஷாலினி உள்ளிட்ட மாணவர்கள் ஒற்றைக்கம்பு, இரட்டைக்கம்பு, சுருள்வாள், மான்கொம்பு விளையாட்டுகளில் 17 போட்டிகளில் கலந்து கொண்டனர். 17 போட்டிகளிலும் முதலிடம் பெற்று பதக்கங்கள், கேடயம் மற்றும் சான்றிதழ்களை பெற்றுள்ளனர். அதிக அளவில் வெற்றி பெற்ற இந்த அணியின் பயிற்சியாளர் வேலாயுதத்துக்கு கல்லை கலைக்கூடம் விளையாட்டு வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் சிலம்ப மாமன்னன் 2023 விருது மற்றும் சிறந்த ஆசானுக்கான விருது ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் கோவையில் நடைபெற்ற 2 மாநில அளவிலான போட்டிகளில் இந்த அணியினர் கலந்து கொண்டு அதிக அளவினால் வெற்றிகளை பெற்று சிறந்த அணிக்கான விருதுகளையும் பெற்று வந்துள்ளனர்.சென்னையில் நடைபெற்ற மாநில அலவிலான முதலமைச்சர் கோப்பை சிலம்ப போட்டிகளில் கலந்து கொள்ள தங்களுக்கு வாய்ப்பு கிடைத்திருந்தால் நீலகிரி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் பதக்கங்களை இந்த மாணவர் பெற்று வந்திருப்பார்கள் என பயிற்சியாளர் வேலாயுதம் தெரிவித்துள்ளார்.

Related posts

ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் குட்கா விற்ற 13 கடைகளுக்கு சீல்: 20 பேர் மீது வழக்கு

குழந்தை இல்லாத விரக்தியில் ஒட்டுநர் தூக்கிட்டு தற்கொலை

மருத்துவர்கள் தினத்தையொட்டி மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர்