ஆவடியில் பரபரப்பு கத்திமுனையில் பள்ளி மாணவன் கடத்தல்: 3 பேர் கைது; 4 பேருக்கு வலை

ஆவடி: பள்ளி மாணவன் கடத்தப்பட்ட வழக்கில், 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆவடி, கோவில்பதாகையைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியன். இவரது மகன் சுகுமாரன் (15). அப்பகுதியில் ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 10:30 மணி அளவில், ஆவடி திரையரங்கில் படம் பார்த்து விட்டு, கோவில்பதாகை, கலைஞர் நகர் வழியாக நடந்து சென்றார். அப்போது, இரண்டு பைக்கில் வந்த அதே பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் (28), ஜெயராமன்(26), ஸ்டீபன்(23), தமிழரசன்(24) உள்ளிட்ட 7 பேர், அம்மாணவனை கத்தியை காட்டி மிரட்டி தாக்கினர்.

பின்னர், அவனை டு வீலரில் கோவில் பதாகை எரிக்கு கொண்டு சென்றனர். அங்கு, கடந்த 10 நாட்களுக்கு முன்பு நடந்த தகராறு தொடர்பாக, ஆட்களை அடையாளம் காட்ட சொல்லி மாணவரை மிரட்டியுள்ளனர். இதுதொடர்பாக, சுகுமாரனின் பெரியப்பா மகன் நவீன் ராஜ் அளித்த புகாரின்பேரில், ஸ்டீபன், ரஞ்சித் மற்றும் ஜெயராமனை ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவான 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related posts

பிளஸ் 1 மாணவி பாலியல் பலாத்காரம்: அத்தையின் கணவர் கைது

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்