பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் 10 வேலைநாட்களை குறைத்து, திருத்தப்பட்ட நாட்காட்டி வெளியீடு

சென்னை : பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் 10 வேலைநாட்களை குறைத்து, திருத்தப்பட்ட நாட்காட்டி பள்ளிக்கல்வித்துறையால் வெளியீடு செய்யப்பட்டது. பொதுவாக ஒவ்வொரு கல்வியாண்டும் 210 சராசரி வேலைநாட்களை கொண்டிருக்கும் நிலையில், நடப்பு கல்வியாண்டில் 220 நாட்களை வேலைநாட்களாக கொண்டு நாட்காட்டி வெளியிடப்பட்டது.வேலைநாட்களை குறைக்க வேண்டும் என பல தரப்பில் வந்த கோரிக்கையை ஏற்று, 210 வேலைநாட்கள் இருக்கும் வகையில் புதிய நாட்காட்டி வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இந்த 10 நாட்கள் ஆசிரியர்களுக்கான கல்விசார் பயிற்சி நாட்களாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சென்னை அடுத்த பெரும்பாக்கத்தில் குழவி கல்லை தலையில் போட்டு இளைஞர் கொலை..!!

வில்லிவாக்கம் சத்யா நகரில் மாநகராட்சி இடத்தில் ஆக்கிரமித்து கட்டிய 114 வீடுகள் மீது நடவடிக்கை: இடிக்க எதிர்ப்பு தெரிவித்து மண்டல அலுவலகத்தில் முற்றுகை

மத்தியப்பிரதேசத்தில் நடந்த சாலை விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!!