பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு

சென்னை: அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறை நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் 20ம் தேதி முதல் 27ம் தேதி வரையும், பிளஸ்1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு 19ம் தேதி முதல் 27ம் தேதி வரையும், காலாண்டுத் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அட்டவணைப்படி 6ம் வகுப்புக்கு காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரையும், 7ம் வகுப்புக்கு மதியம் 1.15முதல் 3.15 மணி வரையும், 8ம் வகுப்புக்கு காலை 9.30 மணி முதல் 12 மணி வரையும், 9ம் வகுப்புக்கு மதியம் 1.15 மணி முதல் மாலை 4.30 மணி வரையும் தேர்வுகள் நடத்தப்படும். பிளஸ் 1 வகுப்புக்கு மதியம் 1.15 மணி முதல் மாலை 4.30 மணி வரையும், பிளஸ்2 வகு்ப்புக்கு காலை 9.30 மணி முதல் மதியம் 12.45 மணி வரையும் தேர்வுகள் நடக்கும். மேனிலை வகுப்புகளுக்கு கேள்வித்தாள் படித்துப் பார்த்தல், விடைக்குறிப்பேட்டில் விவரங்கள் குறிக்கவும் 15 நிமிடங்கள் ஒதுக்கப்படும்.

* 6-10ம் வகுப்பு அட்டவணை
செப்.20ம் தேதி தமிழ், 21ம் தேதி விளையாட்டுக் கல்வி, 23ம் தேதி ஆங்கிலம், 24ம் தேதி விருப்ப மொழிப்பாடம், 25ம் தேதி கணக்கு, 26ம் தேதி அறிவியல், 27ம் தேதி சமூக அறிவியல்.

* பிளஸ் 1 தேர்வு அட்டவணை
தேதி பாடம்
செப்.19 தமிழ், பிற மொழிப்பாடங்கள்
செப்.20 ஆங்கிலம்
செப்.21 இயற்பியல், பொருளியல், தொழில் திறன்
செப்.23 கணக்கு, விலங்கியல், வணிகவியல், சத்துணவு, நர்சிங்
செப்.25 வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல்
செப்.26 தொடர்பு ஆங்கிலம், கணினி அறிவியல், கணினிப்பயன்பாடு, சிறப்பு தமிழ், மனையியல், உயிரி வேதியியல், அரசியல் அறிவியல், புள்ளியியல், அடிப்படை மின்பொறியியல்
செப்.27 உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிககணிதம்/புள்ளியியல், தொழில் பாடங்கள்

* பிளஸ் 2 வகுப்பு அட்டவணை
தேதி பாடம்
செப்.19 தமிழ் மற்றும் பிறமொழிப்பாடங்கள்
செப்.20 ஆங்கிலம்
செப்.21 இயற்பியல், பொருளியல், தொழில் திறன்
செப்.23 கணக்கு, விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், தொழில் பாடங்கள்
செப்.25 உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம்/புள்ளியியல், தொழி்ல் பாடங்கள்
செப்.26 தொடர்பு ஆங்கிலம், கணினி அறிவியல், கணினிப்பயன்பாடு, உயிரி வேதியியல், சிறப்புத் தமிழ், மனையியல், அரசியல் அறிவியல், புள்ளியியல், தொழில் பாடங்கள்
செப்.27 வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல்.

Related posts

உத்தராகண்ட் நிலச்சரிவு: 10 தமிழர்கள் சென்னை வருகை

தந்தை பெரியார் 146-வது பிறந்த நாள்: காங். தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கனிமொழி எம்.பி., அமைச்சர் உதயநிதி வாழ்த்து!!

முதலமைச்சர் நீர்நிலை பாதுகாவலர் விருது வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!!