பிளஸ்2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு சாய்ராம் கல்வி குழுமம் சார்பில் ரூ.10 லட்சம் கல்வி உதவித்தொகை

தாம்பரம்: சாய்ராம் கல்வி குழும தாளாளர் லியோமுத்து 9ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று மேற்கு தாம்பரம், சாய்ராம் பொறியியல் கல்லூரியில் உள்ள அவரது நினைவிடத்தில் நடந்தது. சாய்ராம் தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் பழனிக்குமார் வரவேற்றார். சாய்ராம் பொறியியல் கல்லூரி முதல்வர் ராஜா, புலத் தலைவர்கள் அருணாச்சலம், ரெனி ராபின் கருத்துரை வழங்கினர். சிறப்பு விருந்தினராக கல்வியாளர் சுஜித்குமார் கலந்துகொண்டு, மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். சாய்ராம் கல்வி குழும தலைவர் சாய்பிரகாஷ் லியோமுத்து பாரத சாரண, சாரணிய இயக்கம், நேரு யுவகேந்திரா சங்கதான், பிட் இந்தியா ஆகிய முன்னெடுப்புகளை சாய்ராம் குழும கல்லூரிகளில் தொடங்கி வைத்தார்.

அவர் பேசுகையில், ‘‘பொருளாதாரத்தில் பின்தங்கிய நன்கு கல்வி பயிலும் கிராமப்புற மாணவ – மாணவிகளுக்கு அவர்களது படிப்பு, தங்கும் விடுதி மற்றும் உணவு உள்பட தேவையான செலவுகளை லியோமுத்து கல்வி அறக்கட்டளை சார்பாக ஏற்றுக்கொள்வதாகவும், இந்த கல்வி ஆண்டு மாணவர்களுக்கு ரூ.12 கோடி மதிப்பிலான கல்வி உதவித்தொகை வழங்குவதாகவும், ஒட்டுமொத்த சமூக வளர்ச்சியும், அவருடைய மகிழ்ச்சியும் மிகவும் முக்கியம் என்று கருதும் மாபெரும் மனிதரின் நினைவு நாளில் இன்னும் பலருக்கு பயன்படக்கூடிய சிறந்த சேவையை செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். இதுவே தாளாளர் லியோ முத்து அறக்கட்டளையின் நோக்கம்” என்றார்.

இதையடுத்து சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக‌ மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகள் 100 பேருக்கு ரூ.10 லட்சம் மதிப்புக்கான லியோமுத்து கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. `நிகழ்ச்சியில் அறக்கட்டளை துணை தலைவர் கலைச்செல்வி லியோமுத்து, நிர்வாக இயக்குநர் சத்தியமூர்த்தி, அறங்காவலர்கள் சர்மிளா ராஜா, ரேவதி சாய் பிரகாஷ், மூர்த்தி, சதீஷ்குமார், முனுசாமி, பாலசுப்ரமணியம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். புலத்தலைவர் ராஜேந்திர பிரசாத் நன்றி கூறினார்.

 

Related posts

லெபனானில் பேஜர்களை தொடர்ந்து வாக்கி டாக்கிகள் வெடித்ததில் 20 பேர் உயிரிழப்பு

உத்திரப்பிரதேசத்தில் உயர்அழுத்த மின் கம்பி அறுந்து 20 பேர் காயம்

திருச்சி என்ஐடி கல்லூரியில் படிக்கும் மத்திய பிரதேச மாநில மாணவி காணாமல் போனதாக புகார்