மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவித்தொகை இருமடங்காக உயர்வு

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் வழங்கப்படும் பள்ளி-கல்லூரிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ- மாணவியர்களுக்கான ஆண்டு உதவித்தொகையை இருமடங்காக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி 1 முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ரூ.1,000ல் இருந்து ரூ.2,000 ஆகவும், 6 முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ரூ.3,000ல் இருந்து ரூ.6,000ஆகவும், 9 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ரூ.4,000ல் இருந்து ரூ.8,000ஆகவும் உயர்வு.

கல்லூரிகளில் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு ரூ.6,000ல் இருந்து ரூ.12,000 ஆகவும் உயர்வு. தொழிற்கல்லூரிகளிலும், பட்ட மேல்படிப்புகளிலும் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.7,000ல் இருந்து ரூ.14,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித்தொகைத்திட்டம் (Chief Minister’s Research Fellowship) – 2024-2025 முதல் ஆராய்ச்சிப் படிப்பு(Ph.D.,) மேற்கொள்ளும் 50 மாற்றுத்திறன் மாணவர்களுக்கு ரூ.1,00,000 வீதம் 50 மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.50,00,000 நிதி ஒப்பளிப்பு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

அக்டோபர் 3-வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும்: வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் தகவல்

ஈஷா யோக மையம் தொடர்பான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை: ஈஷா அறக்கட்டளை

பிகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டம் கிலாஃபத் நகர் பகுதியில் குண்டு வெடிப்பு: 7 சிறுவர்கள் காயம்