தலைசுற்ற வைக்கும் தங்கம் விலை…ஒரு சவரன் ரூ.46,000ஐ தாண்டியது: இல்லத்தரசிகள் வருத்தம்!!

சென்னை: சென்னையில் தங்கம் விலை மீண்டும் ரூ.46,000ஐ தாண்டியது. தங்கம் விலை கடந்த 3 மாதமாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் இஸ்ரேல், ஹமாஸ் இடையிலான போர் உருவானதை தொடர்ந்து தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், சில நாட்களுக்கு பிறகு சற்று குறைவதுமாகவும் இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த 24ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.45,400க்கு விற்கப்பட்டது. 25ம் தேதி தங்கம் விலை குறைந்து ஒரு சவரன் ரூ.45,240க்கு விற்கப்பட்டது. இந்த விலை குறைவு ஒரு நாள் கூட நீடிக்கவில்லை. 26ம் தேதி தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்வை சந்தித்தது.

அதாவது தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,700க்கும், சவரனுக்கு ரூ.360 அதிகரித்து ஒரு சவரன் ரூ.45,600க்கும் விற்கப்பட்டது. தொடர்ந்து 27ம் தேதி ரூ.40 உயர்ந்து சவரன் ரூ.45,640க்கு விற்பனையானது. இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. அதாவது கிராமுக்கு ரூ.65 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,770க்கும், சவரனுக்கு ரூ.520 அதிகரித்து ஒரு சவரன் ரூ.46,160க்கும் விற்கப்பட்டு வருகிறது. இந்த திடீர் விலை உயர்வு நகை வாங்குவோரை சற்று அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதே போல சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை மாற்றமின்றி ரூ.77.50க்கு விற்பனையாகிறது. அடுத்த மாதம் 12ம் தேதி தீபாவளி வருகிறது. இந்த நேரத்தில் நிறைய பேர் நகை வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். தீபாவளி நேரத்தில் தங்கம் விலை உயர்வு அவர்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்