சௌ சௌ கொத்தமல்லி சட்னி

தேவையான பொருட்கள்:

சௌ சௌ – 1 கப் (துண்டுகளாக்கப்பட்டது)
கொத்தமல்லி – 1 கப்
உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன்
கடலை பருப்பு – 1 டீஸ்பூன்
புளி – சிறிது
வரமிளகாய் – 3
எண்ணெய் – 2 டீஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு…

எண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:

முதலில் சௌ சௌ காயை எடுத்து அதன் தோலை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.பின்பு அதில் துண்டுகளாக்கப்பட்ட சௌ சௌவை சேர்த்து வதக்கி, நன்கு வேக வைகக வேண்டும். சௌ சௌ வெந்ததும், புளியை சேர்த்து வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும். பிறகு வதக்கிய பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் கொத்தமல்லியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.பின் அரைத்த சட்னியை ஒரு பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும். இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ண்ய ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான சௌ சௌ கொத்தமல்லி சட்னி தயார்.

Related posts

பீன்ஸ் தேங்காய்ப்பால் பொரியல்

பலாப்பழ வறுவல்

ஹைதராபாத் மட்டன் குழம்பு