சவுதி அரேபிய மருத்துவமனைகளில் பணிபுரிய பெண் செவிலியர்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு: விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.!

சென்னை: சவுதி அரேபிய அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு குறைந்தபட்சம் ஒரு வருட பணி அனுபவத்துடன் B.sc Nursing – யில் தேர்ச்சி பெற்று 35 வயதிற்குட்பட்ட பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள். இவர்களுக்கான நேர்காணல் வருகிற 22.07.2024 முதல் 26.07.2024 கொச்சியில் (KOCHIN) நடைபெறவுள்ளது. மேற்படி பணியாளர்களுக்கு உணவுப்படி, இருப்பிடம், விமான பயணச்சீட்டு ஆகியவை அந்நாட்டின் வேலையளிப்பவரால் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் மூலமாக அளிக்கப்படும் வெளிநாட்டு வேலைகளுக்கான பணிக்காலியிடங்கள் குறித்த விவரங்கள் இந்நிறுவன வலைத்தளமான www.omcmanpower.tn.gov.in <http://www.omcmanpower.tn.gov.in> – ல் கண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் ஊதியம் மற்றும் பணி விவரங்கள் பற்றிய விவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தொலைபேசி எண்களின் வாயிலாக அறிந்து கொள்ளலாம் (9566239685, 6379179200) (044-22505886 / 044-22502267) மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.omcmanpower.tn.gov.in <http://www.omcmanpower.tn.gov.in> என்ற அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் வலைதளத்தில் தவறாமல் பதிவுசெய்துகொண்டு ovemclmohsa2021@gmail.com <mailto:ovemclmohsa2021@gmail.com> என்ற இந்நிறுவனத்தின் மின்னஞ்சலுக்கு தங்களின் சுய விவர விண்ணப்பப்படிவம், கல்லூரிச்சான்றிதழ் பாஸ்போட் (Passport) அனுபவச்சான்றிதழ் ஆகியவற்றை அனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்திற்கு எந்த ஒரு இடைத்தரகரோ அல்லது ஏஜெண்ட்டுகளோ கிடையாது. விண்ணப்பதாரர்கள் நேரிடையாக பதிவு செய்து கொண்டு இந்நிறுவனத்தின் மூலம் பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். படிப்பு மற்றும் பணிவிவரங்களின் தகுதியைப் பொறுத்து முன்னுரிமை வழங்கப்படும், இந்தப்பணிக்கு தேர்வுபெறும் பணியாளர்களிடமிருந்து சேவைக் கட்டணமாக ரூ.35,400/- மட்டும் வசூலிக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

Related posts

அரியலூரில் காலணி உற்பத்தி ஆலை அமைக்க தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல்.

ஹரியானா தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாது: காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் பேட்டி

ஹாங்காங் சிக்ஸர் லீக் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களும் விளையாடவுள்ளதாக அறிவிப்பு