சத்தியமங்கலத்தில் புலிகள் வேட்டையில் பவாரியா கும்பலுக்கு தொடர்பு: தமிழ்நாடு வனத்துறை தகவல்

சென்னை: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் புலிகள் வேட்டையாடப்பட்டதில் வடமாநிலங்களை அச்சுறுத்தும் பவாரியா கொலை கும்பலுக்கு தொடர்பு இருப்பதாக தமிழ்நாடு வனத்துறை தெரிவித்துள்ளது. சத்தியமங்கலம் புலிகள் வேட்டையாடப்பட்டது தொடர்பான வழக்கில் இந்த பரபரப்பு தகவலை சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு வனத்துறை தெரிவித்துள்ளது. புலிகள் வேட்டையாடப்பட்டது தொடர்பான வழக்கை நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்கரவர்த்தி அமர்வு விசாரித்தது.

அப்போது புலி வேட்டையில் பவாரியா கொள்ளையர்களுக்கு தொடர்பு இருப்பதாகும். முக்கிய குற்றவாளியை மராட்டிய மாநில போலீசார் கைது செய்துள்ளனர் என்றும் வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வனத்துறையினரின் கோரிக்கையை ஏற்று மராட்டியத்தில் கைதானவரை சத்தியமங்கலம் புலி வேட்டை வழக்கில் கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கின் விசாரணையை நவம்பர் 8-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். யானைகள் வேட்டை தொடர்பான வழக்கில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படவில்லை என்ற புகார் நீதிமன்றத்தில் உள்ளது.

புகார் தொடர்பாக முன்னாள் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் மற்றும் சிபிஐ எம்.பி. ஆகியோரை நவம்பர் 8-ம் தேதி காணொளி காட்சி மூலம் ஆஜராகுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். தமிழ்நாடு – கேரள எல்லையில் யானைகளின் இறப்பை தடுக்கும் வகையில் கூடுதல் சுரங்கப் பாதைகளை அமைக்கும் வகையில் இருமாநில வனத்துறை மற்றும் ரயில்வே நிர்வாகம் ஆய்வு மேற்கொள்ள நீதிபதிகள் ஆணையிட்டனர். இந்த அறிக்கையை 4 வாரங்களில் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளனர்.

Related posts

கள்ளக்குறிச்சி மாவட்டம்: வடதொரசலூரில் சிறுவர்கள், சிறுமிகள் உட்பட 7 பேருக்கு எலிக்காய்ச்சல் பாதிப்பு!

திருப்புத்தூர் அருகே காய்கறி வேன் கவிழ்ந்து விபத்து: டிரைவர், கிளீனர் படுகாயம்

ஜாமீனில் விடுவிக்கப்பட்டவர்களிடம் ‘கூகுள் லொகேஷன்’ கேட்க கூடாது: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு