சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஆதிகருவண்ணராயர் கோவில் மாசிமகம் திருவிழா:

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள ஆதிகருவண்ணராயர் கோவில் மாசிமகம் திருவிழாவையொட்டி உயர்நீதி மன்ற உத்தரவுபடி வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. வனத்துறையினர் வாகனங்களை தீவிர சோதனைக்கு பிறகே அனுமதித்தனர்.ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பவானிசாகர் வனச்சரகத்துக்கு உட்பட்ட தெங்குமரஹாடா வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற ஆதி கருவண்ணராயர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் இந்த ஆண்டுக்கான மாசிமகம் திருவிழா இன்று தொடங்கியது. வரும் 25ம் தேதி வரை விழா நடைபெறுகிறது.

விழாவில் பங்கேற்க வாகனங்களில் வரும் பக்தர்களை வனப்பகுதிக்குள் அனுமதிப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் திருவிழா நடைபெறும் 3 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு 100 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி இன்று காலை காராச்சிக்கொரை வன சோதனை சாவடியில் திருவிழாவிற்கு செல்லும் வாகனங்களின் ஆவணங்களை வனத்துறையினர் ஆய்வு செய்ததுடன், மது பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என சோதனையிட்டு அனுமதி வழங்கினர். மேலும் இப்பகுதியில், காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் முகாமிட்டு உயர்நீதிமன்ற உத்தரவின்படி வழிகாட்டு நெறிமுறைகளை அமல்படுத்தி வருகின்றனர்.

Related posts

சவாரி அழைத்து செல்வதுபோல் நடித்து பீகார் தொழிலாளர்களை கடத்தி பணம் பறித்த ஆட்டோ டிரைவர்: தப்பிய கூட்டாளிகளுக்கு வலை

காவேரி மருத்துவமனை, டிசிஎஸ் நிறுவனம் சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான்: 5000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்