சத்தியமங்கலம் அருகே கழுதைக்கு பூஜை செய்து விநோத திருவிழா: நூற்றுக்கணக்கான இளைஞர்கள் சாணத்தால் அடித்து உற்சாகம்

ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப்பகுதியில் உள்ள கும்டா புறம் கிராமத்தில் வீரேஸ்வரர் கோயிலில் பாரம்பரியமாக கொண்டாடும் சாணத்தை ஒருவர் மீது ஒருவர் வீசி அடித்துக்கொள்ளும் வினோத திருவிழா நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட இளைஞர்கள் ஒருவரை ஒருவர் சாணத்தால் அடித்துக்கொண்டனர்.

இதனை அங்கு கூடியிருந்த பெண்கள் கைதட்டி ஆர்வத்துடன் ரசித்தனர். பிறகு பக்தர்கள் அனைவரும் குளத்தில் நீராடி விட்டு வீரேஸ்வரரை வழிபட்டனர். அதை தொடர்ந்து பக்தர்கள் விளையாடிய சாணத்தை விவசாயிகள் ஆர்வத்துடன் எடுத்து சென்று தங்கள் விளைநிலத்தில் இட்டனர். அவ்வாறு செய்தால் தங்கள் நிலத்தில் விவசாயம் செழிக்கும் என்பது அவர்களின் நம்பிக்கையாக உள்ளது.

Related posts

பீகாரில் கொட்டும் கனமழையால் 10 நாளில் 4 பாலம் இடிந்து விழுந்தது: எதிர்கட்சிகள் கடும் கண்டனம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் ஜார்க்கண்டில் மேலும் 2 பேரை சி.பி.ஐ. கைது செய்துள்ளது

மதுவிலக்கு திருத்தச்சட்டம் நாளை சட்டப்பேரவையில் அறிமுகம் செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு