சாத்தான்குளம் கொலை காவலருக்கு 4 நாள் இடைக்கால ஜாமீன்

மதுரை: சாத்தான்குளம் வியாபாரி ஜெயராஜ். இவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரது கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்ஐகள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 9 பேருக்கும் கடந்த 4 ஆண்டுகளாக ஜாமீன் கிடைக்கவில்லை. இந்த வழக்கில் சிறையில் உள்ள காவலர் தாமஸ் பிரான்சிஸ், நாளை (ஜூலை 8) நடைபெறும் தனது தங்கையின் திருமணத்தில் பங்கேற்பதற்காக இடைக்கால ஜாமீன் கோரி, ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார். இந்த மனு நீதிபதி ஏ.ஏ.நக்கீரன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, காவலர் தாமஸ் பிரான்சிஸ் ஜூலை 7(இன்று) மாலை 4 மணி முதல் 11ம் தேதி 4 மணி வரை 4 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கினார். இந்த 4 நாட்களில் அவர் தினமும் மெய்ஞானபுரம் போலீசில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். மனுதாருக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

Related posts

கோடம்பாக்கம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து மேயர் பிரியா ஆய்வு

டாணா புயல் எச்சரிக்கை காரணமாக 28 ரயில் சேவைகளை ரத்து செய்தது தெற்கு ரயில்வே

வடமாநில ஏ.டி.எம். கொள்ளை கும்பலை மடக்கிப் பிடித்த நாமக்கல் மாவட்ட காவல் துறையினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து