சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு நீதிபதி நியமனமான 3 மாதத்தில் விசாரணையை முடிக்கவேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த செல்வராணி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘என் கணவர் ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோர், சாத்தான்குளம் போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர். சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் தர், எஸ்ஐ ரகுகணேஷ் உள்ளிட்ட பலர் கைதாகியுள்ளனர். இந்த வழக்கின் விசாரணை மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கின் விசாரணையை குறிப்பிட்ட காலத்திற்குள் விரைந்து விசாரித்து முடிக்குமாறு உத்தரவிட வேண்டும்’’ என்ற கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி கே.முரளிசங்கர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. சிபிஐ வக்கீல் முத்துசரவணன் ஆஜராகி, ‘‘இந்த வழக்கில் இதுவரை 47 பேரிடம் விசாரணை முடிந்துள்ளது. மாஜிஸ்திரேட், டாக்டர் உள்ளிட்ட இன்னும் 8 பேரிடம் மட்டும் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி பணியிடம் தற்போது காலியாக உள்ளது. ஒட்டுமொத்தமாக விசாரணையை முடிக்க மேலும் 5 மாத கால அவகாசம் வேண்டும்’’ என்றார். இதையடுத்து நீதிபதி, ‘‘இறுதி வாய்ப்பாக, நீதிபதி நியமனம் ஆனதில் இருந்து 3 மாதத்தில் விசாரணையை முடிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளார்.

Related posts

கடையின் பூட்டை உடைத்து செல்போன் கொள்ளை

குறைவான வரி செலுத்தி மோசடி: ஆம்னி பேருந்து பறிமுதல்

முன்னாள் திமுக பொறுப்பு குழு உறுப்பினர் இல்ல திருமண விழா: மணமக்களை வாழ்த்திய ஆவடி சா.மு.நாசர் எம்எல்ஏ