சாத்தான்குளம் மரணத்தை எடப்பாடி பழனிசாமி மறைக்க பார்த்ததால் அப்போது சிபிஐ விசாரணை கோரினோம்: அமைச்சர் ரகுபதி சாடல்

சென்னை: சாத்தான்குளம் மரணத்தை எடப்பாடி பழனிசாமி மறைக்க பார்த்ததால் அப்போது சிபிஐ விசாரணை கோரினோம் என அமைச்சர் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். பின்னர், அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

எடப்பாடி பழனிசாமி கூறுவது அப்பட்டமான பொய் – ரகுபதி

பேரவையில் பேச அனுமதி தரவில்லை என பழனிசாமி கூறுவது அப்பட்டமான பொய் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

பேச அழைத்தும் பழனிசாமி அவைக்கு வரவில்லை

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கருத்துகளை கூற வாய்ப்பு அளிக்கப்பட்டது. கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேச முதலமைச்சர் அழைப்பு விடுத்தும் அதிமுகவினர் பங்கேற்கவில்லை.

எதிர்க்கட்சியினருக்கு வாய்ப்பு மறுக்கப்படவில்லை

பேரவையில் பேச அழைத்தும் எடப்பாடி பழனிசாமி அவைக்கு வரவில்லை. பேச வாய்ப்பு அளித்தும் வேண்டுமென்றே அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். கேள்வி நேரத்தை கெடுக்கும் நோக்கில் அதிமுகவினர் செயல்பட்டனர்.

மக்கள் மன்றத்தில் அதிமுக தோல்வி – ரகுபதி

மக்கள் மன்றத்தில் தோல்வி அடைந்ததால் சட்டமன்றத்தில் அமளி செய்கின்றனர். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட முதலமைச்சர், அதிமுகவினரை அனுமதிக்க கோரிக்கை விடுத்தார். கேள்வி நேரம் முடிந்த பிறகு கள்ளக்குறிச்சி விவகாரம் பற்றி விவாதிக்கலாம் என சபாநாயகர் கூறினார்.

விஷச் சாராய மரணத்தில் அரசியல் செய்ய முயற்சி

அதிமுகவை மக்கள் புறக்கணித்து விட்டதால் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அரசியல் செய்ய பழனிசாமி முயற்சி செய்வதாகவும். யார் தவறு செய்தாலும் எத்தகைய பொறுப்பில் இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் கூறியுள்ளார். எதிர்க்கட்சியினரை அவைக்குள் அனுமதிக்கவேண்டும் என்று முதல்வர் பெருந்தன்மையுடன் கோரிக்கை வைத்தார்.

சாத்தான்குளம் மரணத்தை எடப்பாடி மறைக்க முயன்றார்

சாத்தான்குளம் மரணத்தை எடப்பாடி பழனிசாமி மறைக்க பார்த்ததால் அப்போது சிபிஐ விசாரணை கோரினோம். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் வெளிப்படையாகவே செயல்படுகிறோம்; அதனால் சிபிஐ விசாரணைக்கு அவசியமில்லை என்று தெரிவித்தனர். தொழிற்சாலைகளில் இருந்து சட்டவிரோதமாக மெத்தனால் கொண்டு செல்லப்படுவது தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளது. கள்ளுக்கடை திறக்க வேண்டிய அவசியம் தற்போது இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

 

Related posts

சீர்காழி அருகே 3 சகோதரர்களை அரிவாளால் வெட்டிய வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது..!!

கொடைக்கானலில் சட்ட விரோதமாக வெடி பொருட்களை பதுக்கி விற்ற 3 பேர் கைது..!!

நன்றி ரோஹித், ஜெய் ஷாவுக்காகவும் உங்களுக்காகவும் இந்த முடிவை எடுத்தேன்: ராகுல் டிராவிட்