7 ஆண்டுகளுக்குப் பிறகு கோடநாடு செல்லும் சசிகலா: நாளை நடைபெறும் பூமி பூஜை விழாவில் பங்கேற்பு


சென்னை: ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் (7 ஆண்டுகளுக்கு பிறகு) முதல்முறையாக சசிகலா கோடநாடு செல்கிறார். நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இந்த வழக்கில் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ், சயான், வாளையார் மனோஜ், ஜிஜின், திபு, ஜம்சீர் உட்பட 11 பேரை நீலகிரி மாவட்ட போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் 7 ஆண்டுகளுக்கு பிறகு நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டிற்கு வி.கே.சசிகலா இன்று மாலை வருகிறார். அதற்காக சென்னையில் இருந்து தற்போது புறப்பட்டார். சசிகலா இன்று கொடநாடு பங்களாவில் தங்குகிறார். கோடநாடு பங்களாவில் ஜெயலலிதாவின் சிலை வைப்பதற்கான பூமி பூஜையில் நாளை பங்கேற்கிறார். பூஜையை தொடர்ந்து தனது முக்கிய ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். ஜெயலலிதாவின் முழு உருவ சிலையை பிப்.24ல் சசிகலா திறந்து வைக்க உள்ளார்.

2016-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு ஜெயலலிதா, சசிகலா இருவரும் கோடநாடு சென்றனர். 2017-ல் இந்த எஸ்டேட் பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை சம்பவத்திற்கு பிறகு சசிகலா இங்கு வராமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

கொடைக்கானல் அரசு மேல்நிலைப் பள்ளியில் திடீர் ஆய்வு செய்தார் அமைச்சர் அன்பில் மகேஸ்

எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மானநஷ்ட வழக்கு செப் 17-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

மனைவி ஆர்த்தி உடனான திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக நடிகர் ஜெயம் ரவி அறிவிப்பு