பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கிய விவகாரம்; அ.தி.மு.க பொதுக்குழு தீர்மானம் எதிர்த்து சசிகலா மேல்முறையீடு: ஐகோர்ட்டில் வரும் 30ம் தேதி விசாரணை

சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலாவும், துணை பொதுச்செயலாளராக டி.டி.வி. தினகரனும் அதிமுக பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில்,அவர்களை நீக்கி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து, தன்னை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கிய தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி சசிகலா சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இதில் வழக்கை தாக்கல் செய்ய சசிகலாவுக்கு அடிப்படை முகாந்திரம் இல்லை எனக் கூறப்பட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து சசிகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். வழக்கு பட்டியலிடப்படாமல் இருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கோரி நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியம், ஆர்.கலைமதி அமர்வில் சசிகலா தரப்பு வழக்கறிஞர் சார்பில் முறையிடப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வரும் 30ம் தேதி வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தனர்.

Related posts

1.2 லட்சம் பக்தர்களுக்கு கூடுதலாக அன்னதானம் வழங்க ரூ.13.45 கோடி செலவில் திருமலையில் அதிநவீன சமையல் கூடம்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு திறந்து வைத்தார்

காரைக்குடியில் பிரபல ரவுடி சுரேஷ் கைது

சாம்சங் இந்தியா தொழிலாளர்களின் உரிமைகளைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் :வைகோ வேண்டுகோள்