ஆடி மாதத்தில் தொடங்கினார் அதிமுக கொடியுடன் சசிகலா சுற்றுப்பயணம்

தென்காசி: ஆடி மாதத்தில் ஆன்மீக பயணம்தான் செல்வார்கள். ஆனால் ஆடி முதல் நாளான நேற்று அதிமுகவை ஒருங்கிணைப்பதற்கா சசிகலா தனது அரசியல் சுற்றுப்பயணத்தை தென்காசி மாவட்டம், குற்றாலம் காசிமேஜர்புரத்திலிருந்து அதிமுக கொடி கட்டிய வேனில் தொடங்கினார். தொடர்ந்து இலஞ்சி, தென்காசி புதிய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் திரண்டு இருந்த தொண்டர்கள் மற்றும் கட்சியினர் மத்தியில் வேனில் இருந்தபடி அவர் பேசுகையில், ‘எம்ஜிஆர் கட்சி துவங்கியது ஏழை எளிய மக்களுக்காக தான். பிறகு ஜெயலலிதாவும் எம்ஜிஆர் வழியில் ஆட்சி செய்தார்‌. யாரை வேண்டுமானாலும் ஏமாற்றலாம், என்கிட்ட நடக்காது. தொண்டர்கள் ஒற்றுமையாக இருந்து 2026ல் அதிமுக ஆட்சி உருவாக பாடுபட வேண்டும். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர் வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே’ என்றார். சசிகலாவின் நிகழ்ச்சி முழுவதும் ஆங்காங்கே அதிமுக கொடி கட்டப்பட்டிருந்தது.

 

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்