Saturday, September 14, 2024
Home » கார்த்தி நடிக்கும் சர்தார்-2 படிப்பிடிப்பு சண்டை காட்சியின்போது தவறிவிழுந்த பயிற்சியாளர் பலி: வடபழனி ஸ்டூடியோவில் பரபரப்பு

கார்த்தி நடிக்கும் சர்தார்-2 படிப்பிடிப்பு சண்டை காட்சியின்போது தவறிவிழுந்த பயிற்சியாளர் பலி: வடபழனி ஸ்டூடியோவில் பரபரப்பு

by Karthik Yash

சென்னை: வடபழனியில் உள்ள பிரபல ஸ்டூடியோவில் நடிகர் கார்த்தி நடிக்கும் சர்தார்-2 சினிமா சண்டை காட்சி படப்பிடிப்பில், 20 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த சண்டை பயிற்சியாளர் பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை புதுவண்ணாரப்பேட்டை பூண்டி தங்கம்மாள் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை (37), திரைப்பட சண்டை பயிற்சியாளரான இவர், பல்வேறு திரைப்படங்களில் சண்டை காட்சிகளில் நடித்துள்ளார். அதன்படி வடபழனியில் உள்ள பிரபல ஸ்டூடியோ ஒன்றில் நடிகர் கார்த்தி நடிக்கும் சர்தார்-2 திரைப்படத்திற்கான சண்டை காட்சிகள் நேற்று முன்தினம் இரவு எடுக்கப்பட்டது.

அப்போது பயிற்சியாளர் ஏழுமலை 20 அடி உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு மார்பு பகுதியில் பலத்த அடிபட்டு மயங்கினார். உடனே அருகில் இருந்தவர்கள் ஏழுமலையை மீட்டு வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த ஏழுமலை, நுரையீரலில் ஏற்பட்ட ரத்த கசிவு காரணமாக சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார். இதுகுறித்து விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், திரைப்பட சண்டை காட்சியின் போது, எந்த பாதுகாப்பு உபகரணமும் ஏழுமலை அணியாமல் இருந்தது தெரியவந்துள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

14 + fifteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi