சங்கம்விடுதியில் குடிநீர் தொட்டியில் மாட்டுச் சாணம் கலந்ததாக எழுந்த புகாரில் அறிக்கை தாக்கல்

புதுக்கோட்டை: சங்கம்விடுதியில் குடிநீர் தொட்டியில் மாட்டுச் சாணம் கலந்ததாக எழுந்த புகாரில் சிபிசிஐடி சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு 2 வாரம் அவகாசம் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மனுதாரர் குறிப்பிட்டுள்ள புகார்கள் தொடர்பாக விசாரிக்க தனி சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது எனவும் குடிநீர் தொட்டியில் கலகப்பட்டது மாட்டுச் சாணமா என்பதை உறுதி செய்ய தடயங்கள் கிடைக்கிறதா எனவும் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் சிபிசிஐடி தெரிவித்துள்ளது.

Related posts

3 புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்த தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம் 11 பேருக்கு 3 நாள் சிபிசிஐடி காவல்: நீதிமன்றம் அனுமதி

குமரியில் நீர்நிலை கரையோரம் கொட்டப்படும் குப்பைகள்; சுகாதார சீர்கேட்டால் மக்கள் பாதிப்பு