‘சாண்ட்விச்’ உணவில் புழு: பெண் பயணியிடம் மன்னிப்பு கேட்ட இண்டிகோ

புதுடெல்லி: இண்டிகோ விமானத்தில் வழங்கப்பட்ட ‘சாண்ட்விச்’ உணவில் புழு இருந்தது குறித்து பெண் பயணி வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளார். ெடல்லியில் இருந்து மும்பைக்கு சென்ற விமானத்தில் பயணம் செய்த குஷ்பு குப்தாவுக்கு பரிமாறப்பட்ட சாண்ட்விச்சில் உயிருடன் புழு இருந்தது. அதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், உடனடியாக தனது செல்போன் மூலம் அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

தனக்கு வழங்கப்பட்ட சாண்ட்விச்சில் புழு இருப்பது குறித்து விமானப் பணியாளர்களிடம் புகார் அளித்த பின்பும், மற்ற பயணிகளுக்கும் தொடர்ந்து சாண்ட்விச் விநியோகிக்கப்பட்டது என்றும் அவர் அந்த வீடியோ பதிவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இந்தச் சம்பவத்துக்கு மன்னிப்பு கோரியுள்ள இண்டிகோ விமான நிறுவனம், இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது என்றும், சாண்ட்விச்சை வழங்கும் உணவு விநியோக நிறுவனத்திடம் இதுகுறித்து விளக்கம் கேட்கப்படும் என்றும் வருங்காலங்களில் இதுபோன்று நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Related posts

செப் 21: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை!.

சென்னையில் நகரின் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய மழை

மன்மத ராசா.. மன்மத ராசா.. கன்னி மனச கிள்ளாதே… பிரபல மேட்ரிமோனியல் மூலமாக 50 பெண்களை வீழ்த்திய மன்மதன்