ஆவுடையார்கோவில் அருகே மணல் கடத்தி வந்த லாரி பறிமுதல்

 

அறந்தாங்கி,டிச.31: ஆவுடையார்கோவில் அருகே மணல் கடத்தி வந்த லாரியை வருவாய் துறையினர் பறிமுதல் செய்தனர்.ஆவுடையார்கோவில் வருவாய் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் நேற்று பட்டமுடையான் பகுதியில் ரோந்து சென்றார். அப்போது அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி பரிசோதனை செய்த போது லாரியில் அனுமதி இல்லாமல் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து மணல் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்து நாகுடி போலீசாரிடம் ஒப்படைத்தனர்‌. இதுகுறித்து நாகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.ஜல்லிக்கட்டு விழா அன்று ஊர் முழுவதும் விழாக்கோலம் பூண்டு இருக்கும் திரும்பும் திசை எல்லாம் இளைஞர்களும், இளம்பெண்களும், மாடுபிடி வீரர்களும், பார்வையாளர்களும், வாகனங்களும் ஊர் முழுவதும் குழுமி இருக்கும்.

Related posts

நீர் நிலைகளில் வண்டல் மண் எடுக்க அனுமதியளித்த முதல்வரின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது: மண்பாண்ட தொழிலாளர்கள், விவசாயிகள் பாராட்டு

மலைக்கோட்டை கோயிலுக்கு சொந்தமான ரூ.3.25 கோடி நிலம் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பு

தொடர் டூவீலர் திருட்டு இருவர் மீது ‘குண்டாஸ்’ மாநகர போலீஸ் கமிஷனர் நடவடிக்கை