சந்தா ஆயுத தொழிற்சாலையில் அப்ரன்டிஸ்கள்

பணியிடங்கள் விவரம்:

1. Graduate Apprentice (Engg., Streams): 45 இடங்கள் (பொது- 23, ஒபிசி-12, எஸ்சி-7, எஸ்டி-3). 45 இடங்களில் மெக்கானிக்கல் பிரிவில் 15 இடங்களும், எலக்ட்ரிக்கல் பிரிவில் 15 இடங்களும், சிவில் பிரிவில் 15 இடங்களும் உள்ளன. தகுதி: சம்பந்தப்பட்ட பாடத்தில் பி.இ., அல்லது பி.டெக்., பயிற்சியின் போது உதவித் தொகையாக ரூ.9 ஆயிரம் வழங்கப்படும்.

2. Graduate Apprentice (General Streams): 45 இடங்கள் (பொது-23, ஒபிசி-12, எஸ்சி-7, எஸ்டி-3). 45 இடங்களில் பிஎஸ்சி அறிவியல் பிரிவுக்கு 25 இடங்களும், பி.காம் பிரிவுக்கு 10 இடங்களும், கம்ப்யூட்டர் அப்ளிகேஷனுக்கு 10 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. தகுதி: அறிவியல்/வணிகவியல்/ கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் பட்டப்படிப்பு. பயிற்சியின் போது உதவித் தொகையாக ரூ.9 ஆயிரம் வழங்கப்படும்.

3. Technical Apprentice (Diploma Holders): 50 இடங்கள். (பொது-25, ஒபிசி-13, எஸ்சி-8, எஸ்டி-4). 50 இடங்களில் மெக்கானிக்கல் பிரிவுக்கு 30 இடங்களும், எலக்ட்ரிக்கல் பிரிவுக்கு 10 இடங்களும், சிவில் பிரிவுக்கு 10 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. தகுதி: சம்பந்தப்பட்ட பாடத்தில் மூன்றாண்டு டிப்ளமோ. பயிற்சியின் போது ரூ.8 ஆயிரம் உதவித் தொகையாக வழங்கப்படும்.

மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு https://munitionsindia.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.07.2024.

Related posts

மழைக்கால மீட்பு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக 10,000 பேருக்கு பயிற்சி அளிக்க பேரிடர் மேலாண்மைத்துறை திட்டம்..!!

சென்னை கிண்டியில் உள்ள பூங்கா மற்றும் பண்ணை பார்வையாளர்களுக்காக நாளை திறக்கப்படும் என அறிவிப்பு

சென்னையில் வடகிழக்கு பருவமழையின்போது வெள்ளம் ஏற்பட்டால் மீட்பு பணிகளில் ஈடுபட 10,000 பேருக்கு பயிற்சி