சந்தன மரங்களுக்கு விலை நிர்ணயித்து அரசாணை வெளியீடு..!!

சென்னை: சந்தன மரங்களுக்கான புதிய விலையை நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 15 வகையான சந்தன மரங்களுக்கு, வகைகளுக்கேற்ப நியாய விலை, சில்லறை விலை இரண்டையும் நிர்ணயம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 2020-21-ம் ஆண்டு முதல் 2023-24-ம் ஆண்டுக்கான மரங்களுக்கு, அவற்றின் தரம், வகைகளுக்கேற்ப விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சோட்லா வகை சந்தன மரத்துக்கு நியாய விலை மெட்ரிக் டன்னுக்கு ரூ.1.64 கோடி, சில்லறை விலை ரூ.1.91 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நியாய விலையை விட, சில்லறை விலைக்கு ஒவ்வோர் ஆண்டுக்கும் 6% விலை அதிகரித்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு