கருவறையில் பால ராமர் சிலையை வைப்பது மரபு மீறல்: அரசியலுக்காக பாஜக மரபுகளை தவறாகப் பயன்படுத்துவதாக திக்விஜய் சிங் விமர்சனம்

டெல்லி: அயோத்தி ராமர் கோவில் கருவறைக்குள் வைக்கப்பட்டுள்ள 5 வயது ராமர் சிலை தொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அயோத்தியில் வரும் 22ம் தேதி ராமர் கோவில் குடமுழுக்கு விழா நடைபெற இருப்பதை ஒட்டி அதற்கான சடங்கு சம்ரதாயங்கள் மற்றும் பூர்வாங்கு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

மைசூரை சேர்ந்த சிற்பி அருள் யோகிராஜ் வடிவமைத்த 5வயது பால ராமர் சிலை கிரேன் உதவியுடன் கருவறையில் வைக்கப்பட்டது. குடமூக்கிலுக்கு நடைபெறும் நாளில் மதியம் 12.30 மணியளவில் சிலையின் கண் திறக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. இந்த நிலையில் கருங்கல்லில் 51 இன்ச்சில் வடிவமைக்கப்பட்டுள்ள பாலராமர் சிலையின் புகைப்படத்தை பாஜக செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

இதை தொடர்ந்து பலரும் அந்த புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர். சிறிது நேரத்தில் கையில் தங்கவில் மற்றும் அம்புடன் ராமர் நிற்கும் வீடியோ காட்சிகளும் வெளியாகின. இந்த நிலையில் முழுவதும் கட்டிமுடிக்கப்படாத கோயில் பிரதிஷ்டை செய்வதும் பால ராமர் சிலையை வைப்பதும் மரபு மீறல் என்று காங்கிரஸ் எம்.பி. திக்விஜய் சிங் விமர்சித்துள்ளார்.

சாஸ்திரபடி கட்டி முடிக்கப்படாத கோயிலில் பிரதிஷ்டை செய்யக்கூடாது என்றிருக்கும் போது சாஸ்திரத்திற்கு எதிராக நடப்பது ஏன் என திக்விஜய் சிங் கேள்வி எழுப்பினார். பாஜக அரசியல் ஆதாயத்திற்காக சாஸ்திரத்தை தவறாக பயன்படுத்தி கொள்கிறது என்று கூறிய அவர் முழுவதுமாக கோவில் கட்டிமுடிக்கப்பட்ட பின்னரே தங்கள் அங்கு செல்வோம் என்றார்.

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா.!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா: உலகம் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி