சனாதனம் விவகாரம் இந்து மக்களின் உணர்வை தூண்டிவிடுகிறது பாஜ: புதுவை மாஜி முதல்வர் குற்றச்சாட்டு

மதுரை: சனாதனம் விவகாரத்தில் இந்து மக்களின் உணர்வை பாஜ தூண்டுவிடுகிறது என்று புதுவை மாஜி முதல்வர் குற்றம்சாட்டி உள்ளார்.

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, மதுரை விமானநிலையத்தில் நேற்று அளித்த பேட்டி:
‘இந்தியா’ கூட்டணியில், ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படுவாரா என்று கேட்கிறீர்கள். பிரதமர் பதவி எங்களுக்கு முக்கியமில்லை. பாசிச பாஜவை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். அதற்காகத்தான் கூட்டணி சேர்த்துள்ளோம் என்று எங்கள் கட்சித் தலைவரே தெளிவாக கூறியுள்ளார். எனவே இதுகுறித்து தேர்தலுக்கு பிறகே முடிவெடுக்கப்படும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

எதையும் மாற்ற முடியாது என்பதுதான் சனாதனம். ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் ஒரு கொள்கை உள்ளது. சனாதனத்தை ஏற்றுக்கொள்ளாத கட்சிகள் உள்ளன. சில மதத்தலைவர்கள் சனாதனத்தை ஏற்றுக் கொள்கிறார்கள். தேர்தல் வருவதால் இந்து மக்களின் உணர்வை தூண்டி விட்டு, இந்துக்களின் எண்ணத்தை மாற்றி, தேர்தலில் ஜெயிக்க பாஜ பின்னால் இருந்து வேலை செய்கிறது. சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை தவறாக பாஜவினர் பரப்பி வருகின்றனர். வரும் 2024 தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெறும். பாஜ அரசு படுதோல்வியை சந்திக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்

திருச்சியில் வாலிபர் வெட்டி கொலை தப்பிய ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ்