சனாதன தர்மம் குறித்து பேசிய வழக்கில் அமைச்சர் உதயநிதிக்கு ஜாமீன்: பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு: சனாதன தர்மத்துக்கு எதிராக கருத்து தெரிவித்த விவகாரத்தில் தமிழ்நாடு இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பெங்களூரு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. சென்னையில் நடந்த சனாதன எதிர்ப்பு மாநாட்டில் சனாதனம் குறித்து தனது கருத்தை உதயநிதி பதிவு செய்தார். இைத எதிர்த்து பெங்களூரு மக்கள் பிரதிநிதிகளுக்கான நீதிமன்றத்தில் கடந்த பிப்ரவரி மாதம் பரமேஷ் என்பவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் உதயநிதி ஸ்டாலின் மட்டுமின்றி அந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களையும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டது.

அம்மனு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றத்தில் ஆஜராக முறைப்படி நான்கு பேர் சார்பில் அவகாசம் கோரியிருந்த நிலையில் விசாரணையை ஜூன் 25ம் தேதிக்கு பெங்களூரு நீதிமன்றம் ஒத்தி வைத்தது. அதன்படி இவ்வழக்கு நேற்று நீதிபதி சரவணா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அப்போது உதயநிதி ஸ்டாலின் சார்பில் வழக்கறிஞர்கள் வில்சன், என்.ஆர்.இளங்கோ, பாலாஜிசிங் ஆகியோர் ஆஜராகினர். வழக்கில் அமைச்சர் உதயநிதிக்கு ஜாமீன் வழங்கி விசாரணையை ஆக.8க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Related posts

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது டெல்லி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு