சாம்சங் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஸ்ரீபெரும்புதூர் சாம்சங் நிறுவனம் ஊதியத்தை உயர்த்தி வழங்கிட, தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம் கிடைத்திட, 9 மணி நேரத்திற்கும் அதிகமாக நீளும் பணிநேரத்தை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நியாமான பல கோரிக்கைகளை முன்வைத்து சுமார் 90 சதவிகித சாம்சங் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சாம்சங் நிறுவனத்திற்கு எதிரிலேயே நடக்கும் தொடர் போராட்டத்தை நிறுவனமும், தமிழக அரசும் கண்டும் காணாமல் இருப்பது நியாயமில்லை. எனவே தமிழக அரசு சாம்சங் தொழிற்சாலை சம்பந்தமாக, தொழிலாளர்கள் போராட்டம் சம்பந்தமாக, தீபாவளி போனஸ் சம்பந்தமாக உடனடியாக தமிழக அரசின் சார்பில் ஒரு குழு, சாம்சங் நிறுவனத்தின் சார்பில் ஒரு குழு, தொழிலாளர்கள் சார்பில் ஒரு குழு அமைத்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இப்பேச்சுவார்த்தையின் மூலம் சுமுக தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

செங்கோட்டை அருகே அதிகாலையில் ஊருக்குள் புகுந்த யானைகள்: வனத்துறையினர் போராடி காட்டுக்குள் விரட்டினர்

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி

வைகை அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது!