சாம்சங் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி ஆப்பிள் முன்னேற்றம்: இந்தியாவில் மின்னல் வேகத்தில் எகிறிய ஐஃபோன் விற்பனை

மும்பை: இந்திய ஸ்மார்ட் போன் சந்தை வருவாயில் சாம்சங்கை பின்னுக்கு தள்ளி ஆப்பிள் நிறுவனம் அதிக வருவாய் எட்டியுள்ளது. அங்கொன்றும், இங்கொன்றுமாக இருந்த ஐபோன் தற்போது வாடிக்கையாளர்களின் மதிப்பு மிக்க பொருளாக மாறியுள்ளது. குறிப்பாக இந்தியாவில் ஐபோன் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் இந்திய ஸ்மார்ட் போன் சந்தை வருவாயில் சாம்சங் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி ஐஃபோன் முன்னேறி உள்ளது.

2024ஆம் ஆண்டு முதல் பாதியில் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் 48 லட்சம் ஐஃபோன்களை ஏற்றுமதி செய்தது இதன் மூலம் 456 கோடி ரூபாயை அந்நிறுவனம் ஈட்டியுள்ளது. அதே சமயம் 98 லட்சம் ஸ்மார்ட் போன்களை ஏற்றுமதி செய்த சாம்சங் நிறுவனம் 343 கோடி ரூபாயை ஈட்டியது. ஆப்பிள் நிறுவனத்தை விட 1113 கோடி ரூபாய் வருவாயில் பின்தங்கியுள்ளது. ஆப்பிள் நிறுவனமானது ஸ்மார்ட் போன் சந்தையில் குறைந்த பங்கை கொண்டிருந்தாலும் மதிப்பின் அடிப்படையில் புதிய உயர்வை பெற்றுள்ளது.

Related posts

கேளம்பாக்கம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை

சாமியாருடன் சுற்றித்திரிந்த பெண் கழுத்தறுத்து கொடூர கொலை

மகனை காப்பாற்ற இறங்கியபோது கல்லணை கல்வாயில் மூழ்கி எஸ்எஸ்ஐ பலி