சாம்ராஜ்நகர் மறுவாக்குப்பதிவு வெறும் 71 பேர் மட்டுமே ஓட்டு

பெங்களூரு: கலவரம் காரணமாக வாக்கு பதிவு நிறுத்தப்பட்ட சாம்ராஜ்நகர் இண்டிகனதா கிராம வாக்குச்சாவடியில் நேற்று மறுவாக்கு பதிவு நடந்தது. இதில் 71 பேர் மட்டுமே வாக்களித்தனர். மாநிலத்தில் முதல் கட்டமாக 14 மக்களவை தொகுதிக்கு தேர்தல் நடந்தது. இதில் சாம்ராஜ்நகர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஹானுர் சட்டப்பேரவை தொகுதியில் உள்ள இண்டிகனதா கிராமத்தில் உள்ள வாக்கு சாவடி எண் 146ல் உள்ள வாக்காளர்கள் தங்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வாக்களிப்பை 5க்கும் மேற்பட்ட கிராம மக்கள் புறக்கணித்தனர். அப்போது நடந்த கலவரத்தில் வாக்கு இயந்திரங்களை அடித்து உடைத்தனர். இதனால் வாக்கு பதிவு ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் இங்கு நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மறுவாக்கு பதிவு நடந்தது. கலவரம் காரணமாக பெருவாரியான மக்கள் தேர்தலை புறக்கணித்து தங்கள் வீடுகளை பூட்டி விட்டு வனப்பகுதிக்கு சென்றுவிட்டனர். இந்த வாக்குச்சாவடிக்கு உட்பட்ட மென்தரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வாக்களித்தனர். இந்த வாக்குச்சாவடியில் மொத்தம் உள்ள 538 வாக்காளர்களில் 71 பேர் மட்டுமே வாக்களித்தனர். வீடுகளை பூட்டி சென்றவர்கள் மாலை வரை வீடு திரும்பவில்லை, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மறுவாக்குப்பதிவு நடந்து முடிந்தது.

Related posts

வடமதுரை மின்வாரிய அலுவலக வளாகத்தில் புதர் மண்டிக்கிடக்கும் தொகுப்பு வீடுகள்: சீரமைக்க கோரிக்கை

ஒன்றிய அரசைக் கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

சோழவரம் அருகே குளத்தில் மூதாட்டி சடலம் மீட்பு