சாமி தனக்கு எதுவும் செய்யவில்லை என ஆத்திரம்!: சென்னை பாரிமுனையில் கோயிலுக்குள் பெட்ரோல் குண்டு வீசிய நபர் கைது..!!

சென்னை: சென்னை பாரிமுனையில் கோயிலுக்குள் பெட்ரோல் குண்டு வீசிய நபர் கைது செய்யப்பட்டார். சென்னை பாரிமுனை கோவிந்தப்ப நாயக்கன் தெரு ஜங்ஷனில் ஸ்ரீ வீரபத்ர சுவாமி தேவஸ்தான கோயில் செயல்பட்டு வருகிறது. இன்று காலை வழக்கம் போல் கோயில் அர்ச்சகர் கோயிலை திறந்து பூஜைகளில் ஈடுபட்டிருந்த போது, வீரபத்ர சாமி கோயில் அருகே ஜிகே டிரேடர்ஸ் என்ற கடை வைத்து நடத்தி வரும் முரளிகிருஷ்ணா என்பவர் சாமி கும்பிட வந்துள்ளார்.

சிறிது நேரத்தில், சாமி தனக்கு எதுவும் செய்யவில்லை என்ற ஆத்திரத்தில் பீர் பாட்டிலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கோயில் உள்ளே சென்று முரளிகிருஷ்ணா வீசியுள்ளார். இதில் உடனடியாக அப்பகுதியில் தீ பற்றி எறியவே கோயில் அர்ச்சகர் உடனே வெளியே ஓடி வந்துள்ளார். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, பெட்ரோல் குண்டு வீசிய முரளிகிருஷ்ணாவை கொத்தவால்சாவடி போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெட்ரோல் குண்டு வீசிய நபர் மதுபோதையில் தாக்குதல் நடத்தியிருப்பது தெரியவந்துள்ளது. மேலும் முரளிகிருஷ்ணா சரித்திராபதிவேடு குற்றவாளி என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. உரிய விசாரணைக்கு பின்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்

கோவை ரயில் நிலையத்துக்கு வடமாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தல்: 13 வாலிபர்கள் சிக்கினர்

திருச்சியில் செல்போன் பறித்து தப்பித்த திருடர்களை விரட்டி சென்ற போலீஸ்காரருக்கு வெட்டு: 3 பேர் சிக்கினர்