ஒரே மாவட்டத்தில் பணிபுரியும் ஐஏஎஸ் தம்பதி கணவன் கலெக்டர்… மனைவி கமிஷனர்…

கடலூர்: ஒரே மாவட்டத்தில் கணவன் கலெக்டராகவும், மனைவி கமிஷனராகவும் பணியை துவங்கி உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் முக்கிய துறைகளின் செயலாளர்கள் உட்பட 65 ஐஏஎஸ் அதிகாரிகள் கடந்த 16ம் தேதி மாற்றம் செய்யப்பட்டனர். இதில் நிதித்துறை துணை செயலாளராக பணியாற்றி வந்த சிபி ஆதித்ய செந்தில்குமார் கடலூர் மாவட்ட கலெக்டராக மாற்றம் செய்யப்பட்டார். இவர் கடந்த 19ம் தேதி கடலூர் மாவட்டத்தின் 141வது கலெக்டராக பதவியேற்றார். இந்நிலையில், நேற்று முன்தினம் பல்வேறு மாநகராட்சி கமிஷனர்கள் உட்பட 14 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டனர்.

இதில், பொதுத்துறை துணை செயலாளராக இருந்த அனு, கடலூர் மாநகராட்சி கமிஷனராக நியமனம் செய்யப்பட்டார். மாநகராட்சியாக கடலூர் தரம் உயர்த்தப்பட்ட பின், முதன்முறையாக ஐஏஎஸ் அந்தஸ்தில் ஆணையர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மாநகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ல அனு, கடலூர் மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்ய செந்தில்குமாரின் மனைவி ஆவார். ஒரே மாவட்டத்தில் கணவன் கலெக்டராகவும், மனைவி கமிஷனராகவும் பணியை துவங்கி இருப்பது பொதுமக்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

ஜோ பைடன், கமலாவை கொல்ல யாரும் முயற்சி கூட செய்யவில்லை: எலான் மஸ்க் சர்ச்சை பதிவு

அரசு அலுவலகங்களில் லஞ்சம் தந்ததால்தான் வேலை நடக்கிறது: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி குற்றச்சாட்டு!

மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரம்: வலியுறுத்தும் தமிழ்நாடு அரசு