ஒரே பாலின திருமணம் ஜூலை 10ல் விசாரணை: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

புதுடெல்லி: ஒரே பாலின திருமணம் தொடர்பான மறுஆய்வு மனுக்கள் வரும் 10ம் தேதி விசாரிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஒரே பாலின திருமணத்துக்கு அங்கீகாரம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மொத்தம் 21 வழக்குகள் தொடரப்பட்டன. இவை அனைத்தையும் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. இந்த விவகாரத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் 17ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மாறுபட்ட தீர்ப்பு வழங்கப்பட்டது. அதாவது இரண்டு நீதிபதிகள், “ஒரே பாலின திருமணத்துக்கு ஆதரவாகவும், மற்ற மூன்று நீதிபதிகள் அதற்கு எதிராகவும் தீர்ப்பு வழங்கினர். அதனால் இந்தியாவில் ஒரே பாலின திருமணத்திற்கு அனுமதி இல்லை என்பது உறுதியானது.

மேலும் ஒரே பாலின திருமண விவகாரத்தில் நாடாளுமன்றத்தால் ஒரு இறுதி சட்டம் இயற்றப்படும் வரை, இந்த விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடரும் என தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்த தீர்ப்புக்கு எதிராக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றத்தில் மறுஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில் மேற்கண்ட வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுக்கள் அனைத்தையும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்,சந்திரசூட், நீதிபதிகள் ஹீமா கோலி, பி.எஸ்.நரசிம்மா ஆகியோரும், அதேபோன்று இந்த வழக்கை முன்னதாக விசாரித்தபோது இருந்து ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கு பதிலாக, தற்போது நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் பி.வி.நாகரத்னா ஆகியோர் உட்பட ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு வரும் 10ம் தேதி விசாரணை நடத்த உள்ளது.

Related posts

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்