மேலூர் அருகே சமத்துவ மீன்பிடி திருவிழா: ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு

மேலூர்: மேலூர் அருகே ஆயிரக்கணக்கான கிராம மக்கள் கலந்து கொண்ட சமத்துவ மீன் பிடி திருவிழா பாரம்பரிய முறைப்படி நேற்று நடைபெற்றது. மதுரை மேலூர் அருகே நாகப்பன் செவல்பட்டி அதிகாரி கண்மாயில், நேற்று பாரம்பரிய முறைப்படி ஆயிரக்கணக்கான கிராம மக்கள் கலந்து கொண்ட சமத்துவ மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதில் அட்டப்பட்டி, பூதமங்கலம், கருங்காலக்குடி, தும்பைப்பட்டி, கொட்டாம்பட்டி உட்பட உள்ளூர் மட்டுமல்லாது, சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

கண்மாய் கரையில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களும் கண்மாய்க்குள் இறங்கி தாங்கள் கொண்டு வந்திருந்த வலை, கச்சா, ஊத்தாவால் மீன்களை பிடித்தனர். கெளுத்தி, கெண்டை, கட்லா, ரோகு, விரால், அயிரை என சிறு மீன்கள் முதல் 3 கிலோ எடை உள்ள மீன்கள் வரை பிடிபட்டது. பிடிபட்ட மீன்களை விற்பனை செய்யாமல், வீடுகளில் சமைத்து, இறைவனுக்கு படைத்து, உண்ணுவதை இப்பகுதி மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த மீன்பிடி திருவிழா மூலம், விவசாயம் செழித்து, மழை பெய்யும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாகும்.

 

Related posts

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது

தூய்மை சேவை விழிப்புணர்வு மாரத்தான்: நகராட்சி நிர்வாக இயக்குநர் தொடங்கி வைத்தார்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால், கடனுதவி: கலெக்டர் வழங்கினார்